
ஔவையார் · Avvaiyar
ஆத்திசூடி
Aaththisoodi — 109 one-line lessons, in the order of the Tamil alphabet.
கடவுள் வாழ்த்து · Invocation
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.
உயிர் வருக்கம்
Uyir Varukkam · Vowel Series · 1–13
- 1அறம் செய விரும்புDesire to do good.
- 2ஆறுவது சினம்Anger must be cooled.
- 3இயல்வது கரவேல்Do not withhold what you can give.
- 4ஈவது விலக்கேல்Do not stop others from giving.
- 5உடையது விளம்பேல்Do not flaunt what you own.
- 6ஊக்கமது கைவிடேல்Never lose your zeal.
- 7எண் எழுத்து இகழேல்Do not scorn numbers and letters.
- 8ஏற்பது இகழ்ச்சிBegging is disgraceful.
- 9ஐயம் இட்டு உண்Share before you eat.
- 10ஒப்புரவு ஒழுகுLive in harmony with the world.
- 11ஓதுவது ஒழியேல்Never stop learning.
- 12ஔவியம் பேசேல்Do not speak out of envy.
- 13அஃகஞ் சுருக்கேல்Do not sell grain in short measure.
உயிர்மெய் வருக்கம்
Uyirmei Varukkam · Vowel-Consonant Series · 14–31
- 14கண்டு ஒன்று சொல்லேல்Do not say other than what you saw.
- 15ஙப் போல் வளைBend like the letter ங (nga).
- 16சனி நீராடுBathe in cool water.
- 17ஞயம்பட உரைSpeak pleasingly.
- 18இடம்பட வீடு எடேல்Do not build a house larger than you need.
- 19இணக்கம் அறிந்து இணங்குKnow a person's nature before you befriend them.
- 20தந்தை தாய்ப் பேண்Cherish your father and mother.
- 21நன்றி மறவேல்Never forget a kindness.
- 22பருவத்தே பயிர் செய்Sow in the right season.
- 23மண் பறித்து உண்ணேல்Do not live off land taken from others.
- 24இயல்பு அலாதன செய்யேல்Do nothing against good conduct.
- 25அரவம் ஆடேல்Do not play with snakes.
- 26இலவம் பஞ்சில் துயில்Sleep on a bed of silk-cotton.
- 27வஞ்சகம் பேசேல்Do not speak deceitfully.
- 28அழகு அலாதன செய்யேல்Do nothing unbecoming.
- 29இளமையில் கல்Learn while you are young.
- 30அறனை மறவேல்Never forget the God of righteousness.
- 31அனந்தம் ஆடேல்Do not oversleep, nor play in the sea.
ககர வருக்கம்
Kagara Varukkam · Ka Series · 32–43
- 32கடிவது மறLet go of angry scolding.
- 33காப்பது விரதம்To protect is the true vow.
- 34கிழமைப் பட வாழ்Live to be useful to others.
- 35கீழ்மை அகற்றுCast off baseness.
- 36குணமது கைவிடேல்Never abandon good character.
- 37கூடிப் பிரியேல்Do not part from good friends.
- 38கெடுப்பது ஒழிGive up doing harm.
- 39கேள்வி முயல்Strive to learn by listening.
- 40கைவினை கரவேல்Do not hide your craft.
- 41கொள்ளை விரும்பேல்Do not covet what belongs to others.
- 42கோதாட்டு ஒழிGive up wrongful play.
- 43கௌவை அகற்றுRemove troubles of your own making.
சகர வருக்கம்
Sagara Varukkam · Sa Series · 44–54
- 44சக்கர நெறி நில்Abide by the path of just rule.
- 45சான்றோர் இனத்து இருKeep company with the noble.
- 46சித்திரம் பேசேல்Do not dress up lies as truth.
- 47சீர்மை மறவேல்Never forget honourable ways.
- 48சுளிக்கச் சொல்லேல்Do not speak to offend.
- 49சூது விரும்பேல்Do not crave gambling.
- 50செய்வன திருந்தச் செய்Whatever you do, do it well.
- 51சேரிடம் அறிந்து சேர்Choose your company with care.
- 52சை எனத் திரியேல்Do not idle about to be scorned.
- 53சொல் சோர்வு படேல்Do not slip in your speech.
- 54சோம்பித் திரியேல்Do not loaf about.
தகர வருக்கம்
Thagara Varukkam · Tha Series · 55–65
- 55தக்கோன் எனத் திரிLive so as to be called worthy.
- 56தானமது விரும்புLove to give.
- 57திருமாலுக்கு அடிமை செய்Serve Lord Thirumal.
- 58தீவினை அகற்றுCast off evil deeds.
- 59துன்பத்திற்கு இடங் கொடேல்Do not yield to hardship.
- 60தூக்கி வினை செய்Weigh well, then act.
- 61தெய்வம் இகழேல்Do not scorn God.
- 62தேசத்தோடு ஒத்து வாழ்Live in harmony with your land.
- 63தையல் சொல் கேளேல்Do not blindly follow a wife's counsel.
- 64தொன்மை மறவேல்Never forget your heritage.
- 65தோற்பன தொடரேல்Do not pursue what is bound to fail.
நகர வருக்கம்
Nagara Varukkam · Na Series · 66–76
- 66நன்மை கடைப்பிடிHold fast to goodness.
- 67நாடு ஒப்பன செய்Do what the land approves.
- 68நிலையில் பிரியேல்Do not fall from your good standing.
- 69நீர் விளையாடேல்Do not play in floodwaters.
- 70நுண்மை நுகரேல்Do not overindulge in snacks.
- 71நூல் பல கல்Read many books.
- 72நெற்பயிர் விளைGrow paddy.
- 73நேர்பட ஒழுகுWalk the straight path.
- 74நைவினை நணுகேல்Stay away from deeds that hurt others.
- 75நொய்ய உரையேல்Do not speak idle words.
- 76நோய்க்கு இடங் கொடேல்Give no room to illness.
பகர வருக்கம்
Pagara Varukkam · Pa Series · 77–87
- 77பழிப்பன பகரேல்Do not utter words the wise condemn.
- 78பாம்பொடு பழகேல்Do not keep company with the venomous.
- 79பிழைபடச் சொல்லேல்Do not speak in error.
- 80பீடு பெற நில்Stand where honour is earned.
- 81புகழ்ந்தாரைப் போற்றி வாழ்Protect those who rely on you.
- 82பூமி திருத்தி உண்Till the land and eat.
- 83பெரியாரைத் துணைக் கொள்Take the wise as your guides.
- 84பேதைமை அகற்றுDispel ignorance.
- 85பையலோடு இணங்கேல்Do not keep foolish company.
- 86பொருள் தனைப் போற்றி வாழ்Guard your wealth and live.
- 87போர்த்தொழில் புரியேல்Do not make fighting your trade.
மகர வருக்கம்
Magara Varukkam · Ma Series · 88–98
- 88மனம் தடுமாறேல்Do not let your mind waver.
- 89மாற்றானுக்கு இடங்கொடேல்Give your enemy no opening.
- 90மிகைபடச் சொல்லேல்Do not exaggerate.
- 91மீதூண் விரும்பேல்Do not crave excess food.
- 92முனை முகத்து நில்லேல்Do not always stand at the battlefront.
- 93மூர்க்கரோடு இணங்கேல்Do not befriend the brutish.
- 94மெல்லி நல்லாள் தோள்சேர்Cleave to your gentle, virtuous wife.
- 95மேன்மக்கள் சொல் கேள்Heed the words of the noble.
- 96மை விழியார் மனை அகல்Keep away from the homes of courtesans.
- 97மொழிவது அற மொழிSpeak clearly, leaving no doubt.
- 98மோகத்தை முனிReject infatuation.
வகர வருக்கம்
Vagara Varukkam · Va Series · 99–109
- 99வல்லமை பேசேல்Do not boast of your strength.
- 100வாது முற்கூறேல்Do not rush into argument.
- 101வித்தை விரும்புLove learning.
- 102வீடு பெற நில்Live to attain liberation.
- 103உத்தமனாய் இருBe a person of noble character.
- 104ஊருடன் கூடி வாழ்Live in fellowship with your community.
- 105வெட்டெனப் பேசேல்Do not speak harshly.
- 106வேண்டி வினை செயேல்Do no harm deliberately.
- 107வைகறைத் துயில் எழுRise at dawn.
- 108ஒன்னாரைத் தேறேல்Do not trust your enemies.
- 109ஓரஞ் சொல்லேல்Do not speak with partiality.