thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 97
மகர வருக்கம்Magara Varukkam · Ma Series

மொழிவது அற மொழி

Mozhivathu Ara Mozhi

Speak clearly, leaving no doubt.

சொற்பொருள் — Word Meanings

  1. மொழிவதுmozhivathuபேசுவதுwhat you speak
  2. அறaraஐயம் நீங்க, தெளிவாகclearly, leaving no doubt
  3. மொழிmozhiசொல்say

பொருள் — Meaning

சொல்லப்படும் பொருளைச் சந்தேகம் நீங்கும்படி சொல். பேசுவதைத் தெளிவாகப் பேசு. சொல்வதற்கு முன், இதைச் சொல்ல வேண்டுமா? என்று ஆராய்ந்து, பின் சொல்க.

Say what you mean so clearly that no doubt remains. Speak with clarity. Before speaking, consider whether it needs to be said at all — then speak.

Transliteration

Sollappadum porulaich santhegam neengumpadi sol. Pesuvathaith thelivaagap pesu. Solvatharku mun, ithaich solla vendumaa? endru aaraaynthu, pin solga.

குறிப்பு — Notes

  • மொழிவது = பேசுவது

    Mozhivathu = that which is spoken.

  • எதைச் சொல்ல/பேச வேண்டும்? எப்பொழுது சொல்ல/பேச வேண்டும்? எதைச் சொல்லக்/பேசக் கூடாது? எப்பொழுது சொல்லக்/பேசக் கூடாது? எப்படிச் சொல்ல வேண்டும்? எப்படிச் சொல்லக் கூடாது?

    Questions to reflect on: What should be said? When should it be said? What should not be said? When should one not speak? How should it be said? How should it not be said?