ஆத்திசூடி 2
உயிர் வருக்கம்Uyir Varukkam · Vowel Seriesஆறுவது சினம்
Aaruvathu Sinam
Anger must be cooled.
சொற்பொருள் — Word Meanings
- ஆறுவதுaaruvathuதவிர்க்க வேண்டியதுthat which must be cooled / subdued
- சினம்sinamகோபம்anger
பொருள் — Meaning
கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும். கோபம் வரும் போது நமது சிந்திக்கும் அறிவு குறைந்து உணர்ச்சி வசப்பட்டுத் தவறான முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும். அஃது எல்லோருக்கும் நல்லது அல்ல.
Anger is something to be cooled and controlled. When anger rises, our ability to think clearly weakens, we are swayed by emotion, and we end up making wrong decisions. That is good for no one.
Transliteration
Kobam thanikkappada vendiyathaagum. Kobam varum pothu namathu sinthikkum arivu kurainthu unarchchi vasappattu thavaraana mudivu edukkum soozhnilai uruvaagum. Ahthu ellorukkum nallathu alla.