thiruvalluvarதிருக்குறள்
காப்புச் செய்யுள்
கடவுள் வாழ்த்துKadavul Vaazhththu · Invocation

ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.

Aaththi Soodi Amarntha Thevanai Eththi Eththith Thozhuvom Yaame.

Again and again, let us praise and worship the Lord who sits adorned with the aathi garland.

சொற்பொருள் — Word Meanings

  1. ஆத்திaaththiதிருவாத்தி பூமாலையைa garland of aathi (Bauhinia) flowers
  2. சூடிsoodiஅணிந்து கொண்டுwearing
  3. அமர்ந்தamarnthaவீற்று இருக்கின்றseated, enthroned
  4. தேவனைthevanaiகடவுளை (மத வேறுபாடு இன்றி)God (irrespective of religion)
  5. ஏத்தி ஏத்திeththi eththi(மனம்) வாழ்த்தி (மொழி) வாழ்த்திpraising in thought, praising in word
  6. தொழுவோம்thozhuvom(மெய்) வணங்குவோம்let us worship (with our body)
  7. யாமேyaameநாமேwe ourselves

பொருள் — Meaning

திருவாத்தி பூமாலையை அணிந்து வீற்றிருக்கும் இறைவனை மனத்தாலும் மொழியாலும் வாழ்த்தி, உடலால் வணங்குவோம்.

Let us praise, again and again, the God who sits adorned with a garland of aathi flowers — praising in thought and in word, and worshipping with our body.

Transliteration

Thiruvaaththi poomaalaiyai aninthu veetrirukkum iraivanai manaththaalum mozhiyaalum vaazhththi, udalaal vananguvom.