ஆத்திசூடி 31
உயிர்மெய் வருக்கம்Uyirmei Varukkam · Vowel-Consonant Seriesஅனந்தம் ஆடேல்
Anantham Aadel
Do not oversleep, nor play in the sea.
சொற்பொருள் — Word Meanings
- அனந்தம்ananthamஎல்லையற்ற கடல் (அல்லது) மிகுதியான உறக்கம்the boundless sea (or) excessive sleep
- ஆடேல்aadelவிளையாடாதே, ஈடுபடாதேdo not play in / indulge in
பொருள் — Meaning
கடல் நீரில் விளையாடுவது துன்பம் தரும். மிகுதியாகத் தூங்காதே.
Playing in the sea brings trouble. (Also read as:) Do not oversleep.
Transliteration
Kadal neeril vilaiyaaduvathu thunbam tharum. Miguthiyaaga thoongaathe.
குறிப்பு — Notes
அனந்தம் - எல்லையற்ற, அழிவற்ற, முடிவு இல்லாத. (அந்தம் - எல்லை, அழிவு, முடிவு என்ற பொருள்; இதன் முன் 'அன்' சேர்ந்து எதிர்மறைச் சொல்லாக மாறுகிறது. இது சமஸ்கிருதச் சொல்.)
Anantham — endless, imperishable, boundless. 'Antham' means limit, destruction or end; prefixing 'an-' negates it. It is a Sanskrit word.