thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 5
உயிர் வருக்கம்Uyir Varukkam · Vowel Series

உடையது விளம்பேல்

Udaiyathu Vilambel

Do not flaunt what you own.

சொற்பொருள் — Word Meanings

  1. உடையதுudaiyathuஉனக்கு உள்ள பொருளைwhat you possess
  2. விளம்பேல்vilambelநீ பிறர் அறியும்படி சொல்லாதேdo not announce it for others to know

பொருள் — Meaning

உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களைப் பிறர் அறியுமாறு சொல்லாதே. உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளைப் பலரும் அறியும்படி பெருமையாகப் பேசாதே. உன்னுடைய பலவீனத்தையும் பலரும் அறியும்படி சொல்லாதே. அதனால் நல்ல பயன் எதுவும் இல்லை.

Do not reveal your wealth or your secrets for others to know. Do not boast about your possessions and merits for all to hear. Nor should you expose your weaknesses to everyone — no good comes of it.

Transliteration

Unnidaththilulla porulai allathu irakasiyangalai pirar ariyumaaru sollaathe. Unakkulla porul matrum sirappugalai palarum ariyumpadi perumaiyaaga pesaathe. Unnudaiya balaveenaththaiyum palarum ariyumpadi sollaathe. Athanaal nalla payan ethuvum illai.