thiruvalluvarதிருக்குறள்
ஆத்திசூடி 15
உயிர்மெய் வருக்கம்Uyirmei Varukkam · Vowel-Consonant Series

ஙப் போல் வளை

Ngap Pol Valai

Bend like the letter ங (nga).

சொற்பொருள் — Word Meanings

  1. ஙப்ngap'ங' என்னும் எழுத்தைப்the letter 'ங' (nga)
  2. போல்polபோலlike
  3. வளைvalaiவளைந்து கொடு; சார்ந்தவர்களைத் தழுவிக் காத்திடு, பணிந்து நடbend — embrace those who depend on you; be humble

பொருள் — Meaning

'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயனுள்ளதாக இருந்து தன் வருக்க எழுத்துகளைத் தழுவுகிறதோ அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களைக் காக்க வேண்டும். 'ங' என்னும் எழுத்தைக் கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போலப் பணிவாகப் பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

Just as the letter 'ங' (nga) stays useful while embracing and sheltering the other letters of its series, we too should protect those who depend on us without asking what we gain from them. Also, the letter 'ங' looks like a person bowing in greeting — so this can be read as Avvai advising us to bend humbly before elders.

Transliteration

'Nga' ennum ezhuththaanathu eppadi thaan payanullathaaga irunthu than varukka ezhuththugalai thazhuvugiratho athu pola naamum nammai saarnthavargalaal enna payan endru paaraamal avargalai kaakka vendum. 'Nga' ennum ezhuththai koornthu nokkinaal, oruvar valainthu vanakkam solvathu pol ullathu vilangum. Athaippola panivaaga periyavar mun valaiya vendum endru Auvai uraiththathaagavum eduththukkollalaam.