அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
Akanamarndhu Eedhalin Nandre Mukanamarndhu
Insolan Aakap Perin
Sweet words from smiling lips dispense More joys than heart's beneficence
உரைகள் — Commentaries
MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
SP (சாலமன் பாப்பையா)
முகத்தால் விரும்பி, இனிய சொற்களைக் கூறுகிறவனாகவும் ஆகிவிட்டால், உள்ளம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் அது நல்லது
MK (மு.கருணாநிதி)
முகம் மலர்ந்து இனிமையாகப் பேசுவது, அகம் குளிர்ந்து ஒன்றைக் கொடுப்பதை விட மேலான பண்பாகும்
Couplet
A pleasant word with beaming smile's preferred,Even to gifts with liberal heart conferred
Explanation
Sweet speech, with a cheerful countenance is better than a gift made with a joyous mind