thiruvalluvarதிருக்குறள்
அறத்துப்பால்Araththuppaalஇல்லறவியல்Illaraviyalவாழ்க்கைத் துணைநலம்Vaazhkkaith Thunainalam
குறள் 54

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்

திண்மைஉண் டாகப் பெறின்.

Pennin Perundhakka Yaavula Karpennum

Thinmaiun Taakap Perin

What greater fortune is for men Than a constant chaste woman?

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?

SP (சாலமன் பாப்பையா)

கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை?

MK (மு.கருணாநிதி)

கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதிப் பண்பைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?

Couplet

If woman might of chastity retain,What choicer treasure doth the world contain

Explanation

What is more excellent than a wife, if she possess the stability of chastity ?