thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகற்பியல்Karpiyalநினைந்தவர் புலம்பல்Ninaindhavarpulampal
குறள் 1204

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து

ஓஒ உளரே அவர்.

Yaamum Ulengol Avarnenjaththu Ennenjaththu

Oo Ulare Avar

Have I a place within his heart? Ah from mine he will never depart

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ?

SP (சாலமன் பாப்பையா)

என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா?

MK (மு.கருணாநிதி)

என் நெஞ்சைவிட்டு நீங்காமல் என் காதலர் இருப்பது போல, அவர் நெஞ்சை விட்டு நீங்காமல் நான் இருக்கின்றேனா?

Couplet

Have I a place within his heart!From mine, alas! he never doth depart

Explanation

He continues to abide in my soul, do I likewise abide in his ?