thiruvalluvarதிருக்குறள்
காமத்துப்பால்Kaamaththuppaalகளவியல்Kalaviyalஅலர் அறிவுறுத்தல்Alararivuruththal
குறள் 1146

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்

திங்களைப் பாம்புகொண் டற்று.

Kantadhu Mannum Orunaal Alarmannum

Thingalaip Paampukon Tatru

One lasting day we met alone Lasting rumours eclipse our moon

உரைகள் — Commentaries

MV (முனைவர் வீ.மு.கோவிந்தசாமி)

காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.

SP (சாலமன் பாப்பையா)

நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!

MK (மு.கருணாநிதி)

காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் ``கிரகணம்'' எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது

Couplet

I saw him but one single day: rumour spreads soonAs darkness, when the dragon seizes on the moon

Explanation

It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent